விண்கலன்கள் மற்றும் செயற்கைக் கோள்களுக்கு ஆற்றல் அளிப்பதற்காக ஹைட்ராக்ஸில் அம்மோனியம் நைட்ரேட்டை (Hydroxyl ammonium nitrate- HAN) அடிப்படையாகக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த உந்து எரிபொருள் கலவையை (Environment-friendly propellant blend) இஸ்ரோவின் திரவ உந்து எரிபொருள் அமைப்பு மையத்தின் (Liquid Propulsion Systems Centre-LPSC) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.
இந்த ஹைட்ராக்ஸில் அம்மோனியம் நைட்ரேட் அடிப்படையிலான ஒற்றை உந்து எரிபொருளானது (monopropellant) வழக்கமான ஹைட்ரஜன் ராக்கெட் எரிபொருள்களை பதில்மாற்றம் செய்யும். ஏனெனில் அவை மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்த புற்று நோயை உண்டாக்கும் (carcinogenic) காரணிகள் உள்ள இராசாயனமாகும்.
ஒற்றை உந்து எரிபொருள் (Monopropellant) என்பது தனியே ஆக்ஸிஜனூக்கி (oxidizer) தேவைப்படாத ஓர் வேதியியற் உந்து எரிபொருளாகும்.
இவை செயற்கைக் கோள்களின் சுற்றுவட்டப் பாதைகளின் திருத்தத்திற்காக (orbital correction) செயற்கைக் கோள் பீற்றுவிசைக் கட்டுப்படுத்திகளில் (thrusters) பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.