TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் கார்பன் டை ஆக்ஸைடு

May 25 , 2019 1883 days 710 0
  • மே 11 ஆம் தேதியன்று, முதன்முறையாக சர்வதேச அளவில் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடானது 415 ppm (ppm) என்ற அளவைக் கடந்துள்ளது.
  • இது ஹவாயில் உள்ள மவுனா லோ ஆய்வகத்தில் உள்ள உணரிகளால் அளவிடப்பட்டது.
  • 1958 ஆம் ஆண்டில் இதே இடத்தில் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவின் அளவானது 315 ppm ஆக இருந்தது.
  • வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு விரைவாக அதிகரிப்பது புவி வெப்பமயமாதலைக் காட்டும் குறியீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
ஏன் இது அபாயகரமானது?
  • கார்பன் டை ஆக்ஸைடு வாயு வளிமண்டலத்தில் மிக அதிக வாழ்நாட்களைக் கொண்டுள்ளது. இது 100 முதல் 300 ஆண்டுகள் வரை வளிமண்டலத்தில் இருக்கும்.
  • புவியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அளவு அதிகம் ஆகும் பொழுது கார்பன் டை ஆக்ஸைடு வாயுவின் அளவானது பொதுவாக 450 ppm இருக்கும் என்று கருதப்படுகின்றது.
  • தற்போதைய கார்பன் டை ஆக்ஸைடு வாயு வளர்ச்சி விகிதம் நீடித்தால் 12 ஆண்டுகளுக்கு (2030 ஆம் ஆண்டில்) முன்னதாகவே 450 ppm என்ற நிலையினை அடைந்து விடும் என்று கருதப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்