சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகைத் திட்டத்தின் புதிய வகைகள்
July 25 , 2023 488 days 277 0
பரஸ்பர நிதியங்களுக்கு, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகைத் திட்டத்தின் கீழ் ஐந்து புதிய வகைகளை அறிமுகப் படுத்துவதற்கு வேண்டி இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் அனுமதியளித்துள்ளதோடு, அவற்றுக்கான ஒரு தகவல் வெளியீட்டுக் கட்டமைப்பினையும் வழங்கியுள்ளது.
அந்த ஐந்து புதியப் பிரிவுகள் – விலக்குகள், ஒருங்கிணைப்பு, சிறந்தத் தரம் மற்றும் நேர்மறையானப் பரிசோதனை, தாக்கம் சார்ந்த முதலீடு மற்றும் நிலையான நீடித்த நோக்கங்கள் ஆகியனவாகும்.
தற்போது, பரஸ்பர நிதியம் சமபங்குச் சேமிப்பு திட்டங்கள் என்ற கருத்துரு வகையின் கீழ் ஒரே ஒரு சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகைத் திட்டத்தினை மட்டுமே தொடங்க முடியும்.