TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2024

June 11 , 2024 165 days 327 0
  • சமீபத்தில் சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் கொள்கைக்கான யேல் மையம் ஆனது 2024 ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
  • பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வு என்பது குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதன் காரணமாக எஸ்டோனியா நாடு இந்தத் தரவரிசையில் முன்னணியில் உள்ளது.
  • எஸ்டோனியா, பின்லாந்து, கிரீஸ், தைமூர்-லெஸ்தே மற்றும் ஐக்கிய பேரரசு ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே 2050 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய அளவிலான உமிழ்வு நிலையை அடையத் தேவையான ஒரு விகிதத்தில் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்துள்ளன.
  • இந்தப் பட்டியலில் 34வது இடத்தில் உள்ள அமெரிக்காவில், உமிழ்வுகள் குறைந்து வருகின்றன, ஆனால் அவை குறைவான வேகத்தில் தான் குறைந்து வருகின்றன.
  • சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகியவை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிக அளவு பசுமை இல்ல வாயு உமிழ்வைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
  • கடந்தப் பத்தாண்டுகளில் 32% உமிழ்வு அதிகரிப்புடன், உலகின் மூன்றாவது பெரிய பசுமை இல்ல வாயு உமிழ்வு நாடாக இந்தியா 176வது இடத்தில் உள்ளது.
  • மியான்மர், லாவோஸ், பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் மட்டுமே இந்தியாவிற்கு அடுத்து உள்ள இடங்களைப் பிடித்துள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில், மனிதனால் வெளியாகும் சல்பர் டை ஆக்சைடை அதிக அளவில் வெளியேற்றும் நாடான சீனாவை இந்தியா விஞ்சியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்