சமீபத்தில் சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் கொள்கைக்கான யேல் மையம் ஆனது 2024 ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வு என்பது குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதன் காரணமாக எஸ்டோனியா நாடு இந்தத் தரவரிசையில் முன்னணியில் உள்ளது.
எஸ்டோனியா, பின்லாந்து, கிரீஸ், தைமூர்-லெஸ்தே மற்றும் ஐக்கிய பேரரசு ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே 2050 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய அளவிலான உமிழ்வு நிலையை அடையத் தேவையான ஒரு விகிதத்தில் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்துள்ளன.
இந்தப் பட்டியலில் 34வது இடத்தில் உள்ள அமெரிக்காவில், உமிழ்வுகள் குறைந்து வருகின்றன, ஆனால் அவை குறைவான வேகத்தில் தான் குறைந்து வருகின்றன.
சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகியவை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிக அளவு பசுமை இல்ல வாயு உமிழ்வைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
கடந்தப் பத்தாண்டுகளில் 32% உமிழ்வு அதிகரிப்புடன், உலகின் மூன்றாவது பெரிய பசுமை இல்ல வாயு உமிழ்வு நாடாக இந்தியா 176வது இடத்தில் உள்ளது.
மியான்மர், லாவோஸ், பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் மட்டுமே இந்தியாவிற்கு அடுத்து உள்ள இடங்களைப் பிடித்துள்ளன.
2022 ஆம் ஆண்டில், மனிதனால் வெளியாகும் சல்பர் டை ஆக்சைடை அதிக அளவில் வெளியேற்றும் நாடான சீனாவை இந்தியா விஞ்சியது.