TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் தகவல் திறன் குறியீடு - 2018

January 25 , 2018 2367 days 1053 0
  • பத்து வகைப்பிரிவின் கீழ் 24 செயல்திறன் அளவுருக்களின் அடிப்படையில் 180 நாடுகளினுடைய சுற்றுச் சூழலின் ஆரோக்கியம் மற்றும் சூழலியலின் உயிர்த்தன்மையை (Eco system Vitality) கணக்கிடும் சுற்றுச்சூழல் அறிக்கையே சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடாகும் (Environment Performance Index).
  • உலக பொருளாதார மன்றத்தோடு (WEF-World Economic Forum) இணைந்து யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக் கழகங்களினால் (Yale and Columbia Universitity) ஆண்டிற்கு இரு முறை இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது.
  • நடப்பாண்டிற்கான இக்குறியீட்டின் பதிப்பில், 180 நாடுகளுள் இந்தியா 177வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • நாட்டினுடைய, சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான கொள்கையின் மோசமான செயல்பாட்டின் காரணமாகவும், காற்று மாசுபாட்டினால் உண்டான அதிகப் படியான இறப்புகள் காரணமாகவும் இந்தியா இக்குறியீட்டில்  பின் தங்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்