பத்து வகைப்பிரிவின் கீழ் 24 செயல்திறன் அளவுருக்களின் அடிப்படையில் 180 நாடுகளினுடைய சுற்றுச் சூழலின் ஆரோக்கியம் மற்றும் சூழலியலின் உயிர்த்தன்மையை (Eco system Vitality) கணக்கிடும் சுற்றுச்சூழல் அறிக்கையே சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடாகும் (Environment Performance Index).
உலக பொருளாதார மன்றத்தோடு (WEF-World Economic Forum) இணைந்து யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக் கழகங்களினால் (Yale and Columbia Universitity) ஆண்டிற்கு இரு முறை இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது.
நடப்பாண்டிற்கான இக்குறியீட்டின் பதிப்பில், 180 நாடுகளுள் இந்தியா 177வது இடத்தைப் பிடித்துள்ளது.
நாட்டினுடைய, சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான கொள்கையின் மோசமான செயல்பாட்டின் காரணமாகவும், காற்று மாசுபாட்டினால் உண்டான அதிகப் படியான இறப்புகள் காரணமாகவும் இந்தியா இக்குறியீட்டில் பின் தங்கிய இடத்தைப் பிடித்துள்ளது.