TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு

April 20 , 2020 1554 days 736 0
  • இந்தியாவில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடானது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 என்ற சட்டத்தால் சட்டப்பூர்வமாக ஆதரிக்கப் படுகிறது.
  • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு முறை மற்றும் செயல்முறை குறித்த பல்வேறு விதிகள் இதில் உள்ளன.
  • கோவிட்-19 சூழலிருந்து எழும் திடீர்ச் சூழ்நிலையை எதிர்கொள்ள, பல்வேறு மருந்துகளின் கிடைக்கும் தன்மை அல்லது உற்பத்தியை அதிகரிப்பதற்காக சுற்றுச்சூழல் அமைச்சகமானது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பு - 2006 என்ற அறிவிக்கையில் ஒரு திருத்தத்தைச் செய்துள்ளது.
  • பல்வேறு நோய்களை எதிர்கொள்ள  தயாரிக்கப்படும் மொத்த மருந்துகள் மற்றும் அதற்கான பல்வேறு இடைநிலை உற்பத்திப் பொருள்கள் தொடர்பான அனைத்துத் திட்டங்களும் செயல்பாடுகளும் தற்போதுள்ள வகை ‘ஏ’ என்ற நிலையிலிருந்து வகை ‘பி 2’ என்ற நிலைக்கு மறுவகை செய்யப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்