சுற்றுச்சூழல் நிவாரண நிதி (திருத்தம்) திட்டம், 2024
January 11 , 2025 2 days 35 0
இந்திய அரசாங்கம் ஆனது, 2024 அம் ஆண்டு சுற்றுச்சூழல் நிவாரண நிதி (திருத்தம்) திட்டத்தின் மூலம் 2008 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் நிவாரண நிதித் திட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
நிதி நிர்வாகத்தினை மேம்படுத்துதல், திறம் மிக்க விநியோகத்தினை உறுதி செய்தல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு முயற்சிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஆனது இந்தத் திட்டத்திற்கான ஒரு நிதி மேலாண்மை அமைப்பாக ஐந்து ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளது.
இது 2010 ஆம் ஆண்டு தேசியப் பசுமை தீர்ப்பாயச் சட்டத்தின் 24வது பிரிவின் கீழ் வரும் இழப்பீடுகளிலிருந்தும் மற்றும் மூன்றாம் தரப்புக் காப்பீட்டுச் சட்டத்தின் 14, 15 அல்லது 17 ஆகிய பிரிவின் கீழ் வரும் அபராதங்களிலிருந்தும் நிதியைப் பெறும்.