TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதி (ESA)

May 25 , 2020 1519 days 619 0
  • மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சுழல் பாதுகாப்புப் பகுதி குறித்து முன்கூட்டிய அறிவிப்பு வெளியிடுவதைத் துரிதப்படுத்த 6 மாநிலங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
  • கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகியவை இந்த 6 மாநிலங்களாகும்.
  • மத்திய அரசானது மேற்குத் தொடர்ச்சி மலையின் பன்முகத் தன்மையைப் பாதுகாப்பதற்காக டாக்டர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஓர் உயர் மட்டப் பணிக் குழுவை அமைத்தது.
  • அதற்கு முன்பு காட்கில் தலைமையில் ஒரு குழுவானது அமைக்கப் பட்டிருந்தது.
  • கஸ்தூரி ரங்கன் அறிக்கையானது மேற்குத் தொடர்ச்சி மலையின் 37% பகுதியை ESA என்ற பகுதியின் கீழ் கொண்டு வர முயல்கின்றது. காட்கில் அறிக்கையானது இதனை 64% (ESA - Ecologically Sensitive Area) ஆகப் பரிந்துரைத்திருந்தது. 
  • ESAகள் என்பவை பாதுகாக்கப்பட்ட பகுதிகள், தேசியப் பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் ஆகியவற்றைச் சுற்றிலும் 10 கிலோ மீட்டருக்குள் இருக்கும் ஒரு பகுதியாகும்.
  • ESA ஆனது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 என்ற சட்டத்தின் கீழ் மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தினால் அறிவிக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்