சுற்றுச்சூழல் மாசுபாடு (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) ஆணையம் மீண்டும் அமைப்பு
October 9 , 2018 2240 days 1101 0
மத்திய சுற்றுசூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகமானது உச்சநீதிமன்றத்தால் அதிகாரமளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாடு (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) ஆணையத்தை (Environment Pollution (Prevention and Control) Authority-EPCA) மீண்டும் அமைத்துள்ளது.
இது கடைசி EPCA-வின் காலாவதி தேதியான 2018, அக்டோபர் 31-க்கு பிறகு அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் IAS அதிகாரியான புரேலால் மீண்டும் அமைக்கப்பட்டுள்ள EPCA-ன் தலைவராக தொடர்கிறார்.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCT – National Capital Territory) காற்று மாசுபாட்டை சமாளிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் பணியில் EPCA-வானது ஈடுபடும்.
மேலும் EPCA-வானது நகரின் மாசு அளவைப் பொறுத்து சீராக்கப்பட்ட பதில் செயல் திட்டத்தை (Graded Response Action Plan-GRAP) நடைமுறைப்படுத்த கட்டாயப்படுத்தப்படுகிறது.