சுற்றுப் பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீடு 2024
December 23 , 2024 30 days 138 0
உலகப் பொருளாதார மன்றமானது (WEF) சுற்றுப் பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீட்டினை (TTDI) வெளியிட்டுள்ளது.
இதில் 119 நாடுகளில் இந்தியா 39வது இடத்தில் உள்ளது.
2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முந்தையக் குறியீட்டில், இந்தியா 54வது இடத்தில் இருந்தது.
இருப்பினும், WEF மன்றத்தின் வழிமுறையில் ஒரு திருத்தம் செய்யப்பட்டதால், 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் தரவரிசை 38 வது இடத்திற்கு மாற்றப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான குறியீட்டில் முதல் 5 இடங்களில் உள்ள நாடுகள் அமெரிக்கா, ஸ்பெயின், ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியனவாகும்.
2024 ஆம் ஆண்டில் இக்குறியீட்டின் முதல் 30 மதிப்பெண்களைப் பெற்ற நாடுகளுள், 19 நாடுகள் ஐரோப்பாவினையும், ஏழு நாடுகள் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தினையும், மூன்று நாடுகள் அமெரிக்காவினையும் மற்றும் ஒன்று (ஐக்கிய அரபு அமீரகம்) மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா பிராந்தியத்தினையும் (MENA) சேர்ந்தவையாகும்.