TNPSC Thervupettagam

சுற்றுப்பாதையில் உள்ள 10 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள்

June 13 , 2022 804 days 438 0
  • சுற்றுப்பாதையில் உள்ள பத்து தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை பொதுத் துறை வணிக நிறுவனமான  NSIL நிறுவனத்திடம்  வழங்கச் செய்வதற்கு மத்திய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
  • இந்தச் சொத்துக்களை NSIL நிறுவனத்திற்கு மாற்றும் நடவடிக்கையானது, மூலதனம் சார்ந்த திட்டங்கள்/திட்டங்களைச் செயல்படுத்த நிறுவனத்திற்குத் தேவையான நிதிச் சுயாட்சியை வழங்கும்.
  • ஒரு ஒற்றைச் சாளர இயங்கு நிறுவனமான NSIL நிறுவனத்தின் பங்கு விண்வெளித் துறையில் வணிகத்தை எளிதாக்கும்.
  • 2022 ஆம் ஆண்டில் ஸ்ரீஹரிக் கோட்டாவிலிருந்து அமேசானியா-1 மற்றும் 18 இதர செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியபோது இந்த வணிக நிறுவனமானது அதன் முதல் பணியைத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்