TNPSC Thervupettagam

சுற்றுப்புறச்சூழல் சட்டங்களின் உலகளாவிய மதிப்பீடு

February 7 , 2019 1990 days 602 0
  • ஐக்கிய நாடுகள் தனது முதலாவது சுற்றுச்சூழல் சட்டங்களின் உலகளாவிய மதிப்பீட்டை வெளியிட்டு இருக்கின்றது.
  • கடந்த நாற்பது ஆண்டுகளில் 38 முறைக்கும் அதிகமாக பசுமைச் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட போதிலும் சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமல்படுத்துவது மீது உலகம் மிகக் குறைவான கட்டணங்களைச் செலுத்துகின்றது என இந்த அறிக்கை கூறுகின்றது.
  • ஏறக்குறைய 88 நாடுகள் ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை வழங்கும் அரசியலமைப்பு உரிமையை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் 350க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கின்றன.
  • ஆனால் பருவநிலை மாற்றத்தைக் கணிப்பது, மாசுவைக் குறைப்பது மற்றும் உயிரினங்கள் மற்றும் அதன் வாழ்விடங்கள் மிகப்பரவலான அளவில் அழிந்து போவதைத் தடுப்பது போன்றவற்றில் இருக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று சுற்றுச்சூழல் சட்டங்களை முழுமையாக நிறைவேற்றி அதனை அமல்படுத்துவதில் ஏற்படும் தோல்வி ஆகும்.
  • சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளை நிறைவேற்றுதல் மற்றும் அதன் மோசமான விளைவு ஆகியவற்றிற்குப் பின்னால் இருக்கும் மற்ற விவகாரங்கள் பின்வருமாறு
    • அரசு நிறுவனங்களுக்கிடையே இருக்கும் மோசமான ஒத்துழைப்பு
    • நிறுவன அமைப்புகளில் உள்ள பலவீனமான திறமை
    • தகவல்களை அணுகுவதில் உள்ள பற்றாக்குறை
    • ஊழல் மற்றும் சிக்கலான நகர நிர்வாகத்தின் ஈடுபாடு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்