TNPSC Thervupettagam

சுற்றுலா எளிதாக்கம் மற்றும் தகவல் மையம் துவக்கம்

November 17 , 2018 2073 days 632 0
  • புது டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச (IGI - Indira Gandhi International) விமான நிலையத்தில் சுற்றுலா எளிதாக்கல் மற்றும் தகவல் மையத்தை மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) K.J அல்போன்ஸ் திறந்து வைத்தார்.
  • பார்வையாளர்களுக்கான இந்த எளிதாக்கல் மற்றும் தகவல் வசதி மையமானது இந்த வகையில் அரசின் முதலாவது திட்டமாகும்.
  • IGI விமான நிலையத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பார்வையாளர்களுக்கு 24 x 7 என்ற கால அளவில் தகவல்களை வழங்கும் நோக்கத்துடன் சுற்றுலா அமைச்சகமானது இதனை அமைத்துள்ளது.
  • மேலும் இந்த மையமானது ஆங்கிலமில்லாத மொழி பேசும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ சுற்றுலா அமைச்சகத்தின் 24 x 7 மணி நேர உதவி எண்ணான 1363 என்ற எண்ணுடன் இணைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்