TNPSC Thervupettagam

சுலாபக் ஜல்

July 19 , 2018 2193 days 611 0
  • உலகிலேயே பீகார் மாநிலம் மிக விரைவாக மலிவான குடிநீரை வழங்கவுள்ளது.
  • முதன்முறையாக தண்ணீர் தொடர்பான திட்டமான சுலாபக் ஜல் பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டம் சுலாபக் இண்டர்நேஷனல் (Sulab International) என்னும் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் நாட்டில் ‘சுலாபக் சவ்ச்சல்யா‘ என்னும் கருத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ‘சுலாபக் ஜல்’ என்பது அசுத்தமான குளம் மற்றும் நதிநீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டமாகும்.
  • இத்திட்டத்தின் மூலம், மக்கள் எளிதாக சுத்தமான குடிநீரை 50 பைசா/லிட்டர்க்குப் பெற முடியும்.

 ஆர்சனிக்

  • நேபாள எல்லையை ஒட்டியுள்ள வடபீகாரின் பல மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் ஆர்சனிக் மற்றும் மற்ற இரசாயனங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
  • உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றின்படி (WHO-World Health Organization) ஆர்சனிக் என்பது பூமியின் மேல் ஓட்டில் இயற்கையாக இருக்கும் கூறாகும். இது பூமியின் எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. (வாயு, நீர் மற்றும் நிலம்) இது கனிம வடிவத்தில் அதிக நச்சுத் தன்மையை உடையது.
  • அசுத்தமான குடிநீர், அந்தக் குடிநீரால் தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றில் உள்ள கனிம ஆர்சனிக் நீண்ட காலமாக வெளிப்படும்போது தோல் சிதைவு அல்லது புற்றுநோய் ஏற்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்