TNPSC Thervupettagam

"சுழிய அளவு உமிழ்தலை நோக்கிய பந்தயம்" அறிக்கை

May 13 , 2023 562 days 281 0
  • பாங்காக் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய மற்றும் பசிபிக் பகுதிக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (ESCAP) சமீபத்தில் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • பெரும்பாலான ஆசிய-பசிபிக் நாடுகள், தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொள்ள "போதுமான அளவில் தயாராக இல்லை" என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  • இப்பகுதிகளானது பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை எதிர்கொண்டு வரும் அதே வேளையில், அவற்றின் தூண்டுதலுக்கான முக்கியப் பங்களிப்பாளராகவும் உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் எரிபொருள் எரிப்பினால் ஏற்படும் உலகளாவிய உமிழ்வுகளில் 57% இந்தப் பகுதியிலிருந்து  மட்டுமே வெளியாகியுள்ளது.
  • இந்தப் பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் ஆறு நாடுகள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ளன.
  • இந்தப் பிராந்தியம் முழுவதிலும் இயற்கை மற்றும் உயிரியல் அபாயங்களால் ஏற்படும் சராசரி வருடாந்திரப் பொருளாதார இழப்புகள் 780 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்