- சுவச் பாரத் திட்டத்தின் சுவச் அடையாளச் சின்னத்திற்கான (Swachh Iconic Places - SIP) மூன்றாம் கட்டத்தின் கீழ் கூடுதலாக 10 அடையாள தளங்களை (Iconic Places) மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது.
- இந்த SIPயின் மூன்றாவது கட்டம் உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் கோவிலுக்கு அருகேயுள்ள மனா என்ற கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- இந்த புதிய அடையாள இடங்களாவன
- ராகவேந்திரா சுவாமி கோவில், ஆந்திரப் பிரதேசம்
- பிரம்மா சரோவர் கோவில் (அரியானா)
- மனா கிராமம் (உத்தரகாண்ட்)
- நாக்வாசுகி கோவில் (உத்தரப் பிரதேசம்)
- சபரிமலை கோவில் (கேரளா)
- ஹசர்துவாரி அரண்மனை (மேற்கு வங்காளம்)
- விதுர் குதி (உத்திரப் பிரதேசம்)
- பாங்கோங் ஏரி (ஜம்மு மற்றும் காஷ்மீர்)
- இமா கெய்தல் சந்தை (மணிப்பூர்)
- கன்வாஷ்ரம் (உத்தரகாண்ட்)
- இந்த திட்டம் சுவச் பாரத் திட்டத்தின் கீழ் 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தின் திட்டமாகும்.
ஹசர்துவாரி அரண்மனை (மேற்கு வங்காளம்)
- இத்திட்டம் மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்துடன் இதர மூன்று மத்திய அமைச்சகங்களான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம், கலாச்சார அமைச்சகம் மற்றம் சுற்றுலாத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும்.