TNPSC Thervupettagam

சுவச் சர்வேக்ஸான் - 2018

January 8 , 2018 2385 days 694 0
  • தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் சுற்றுப்புறத் தூய்மை நிலைமையின் கணக்கெடுப்பு ஆய்வான “தி சுவச் சர்வேக்ஷான்“ (Swachh Survekshan) கணக்கெடுப்பின் 2018-ஆம் ஆண்டிற்கான பதிப்பு துவங்கப்பட்டுள்ளதென மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இக்கணக்கெடுப்பின் கீழ், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கட்தொகையுடைய 500 நகரங்கள் தேசிய அளவில் தரவரிசைப்படுத்தப்படும். ஒரு இலட்சத்திற்கும் குறைவான மக்கட் தொகையுடைய 3541 நகரங்கள் மாநிலம் மற்றும் பிராந்திய அளவில் தரவரிசையிடப்படும்.
  • இந்த ஆண்டு இக்கணக்கெடுப்பு ஜனவரி முதல் மார்ச் வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
  • 2016-ஆம் ஆண்டிற்கான நகர்ப்புறங்களின் தூய்மையுடைமை பற்றிய இக்கணக்கெடுப்பின் படி மதிப்பீடு செய்யப்பட்ட 73 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுள் இந்தியாவின் தூய்மையான நகரமாக “மைசூர்“அறிவிக்கப்பட்டது.
  • அதேபோல் 2017-ஆம் ஆண்டிற்கான நகர்ப்புறங்களின் தூய்மையுடைமை பற்றிய இக்கணக்கெடுப்பின்படி, மதிப்பீடு செய்யப்பட்ட 434 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுள் (ULB-Urban Local Body) இந்தியாவின் தூய்மையான நகரமாக “இந்தூர்“ அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்