மத்திய கல்வி அமைச்சகம் ஆனது, தொழில்துறையுடன் இணைந்து உருவாக்கப்பட்ட கல்விப் படிப்புகளை வழங்குவதற்காக என்று ‘சுவயம் பிளஸ்’ என்ற இயங்கு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது இந்த ‘சுவயம் பிளஸ்’ இயங்குதளத்தை இயக்கும்.
இது கல்லூரி மாணவர்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் கல்வி கற்பவர்களின் வேலை வாய்ப்பை மேம்படுத்த முயல்கிறது.
இந்த தொழிற்துறை-கல்வி கூட்டாண்மையானது, கல்விசார் இயங்கு தளத்தின் தீவிரத் தன்மையை தொழில்துறை பங்குதாரர்கள் வழங்கும் நிஜ உலக நிபுணத்துவம் மற்றும் இணக்கம் ஆகியவற்றுடன் இணைக்கும் வகையில் இருக்கும்.