மத்திய இரயில்வே அமைச்சகமானது ராஜதாணி, சதாப்தி உள்ளிட்ட இந்தியாவின் உயர்தர இரயில் வண்டிகளை புதுப்பிக்க சுவார்ன் (Project Swarn) எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் காலந்தவறாமை, தூய்மை, பாதுகாப்பு, பொழுதுபோக்கு, தூய கழிவறைகள், ஊழியர் நடத்தை, தூய்மை பராமரிப்பு, ரயில் பெட்டி உட்பொருட்கள் போன்ற பத்து விஷயங்களில் கவனம் செலுத்தப்படும்.
இதன் வழியிலான புதுப்பிக்கப்பட்ட முதல் ராஜதானி எக்ஸ்பிரஸ் சியால்தா மற்றும் டெல்லிக்கு இடையே அண்மையில் தொடங்கப்பட்டது.