இந்தக் கணக்கெடுப்பானது, 10 வெவ்வேறு உள் தரநிலைகளைப் பயன்படுத்தி ஒரு உலகளாவியக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் சுமார் 89 நாடுகளை தரவரிசைப் படுத்துகிறது.
சுவிட்சர்லாந்து நாடானது வாழ்க்கைத் தரம் மற்றும் சுதந்திரமான வணிகம் ஆகியவற்றின் பல அளவுருக்களில் முன்னணி இடத்தில் உள்ளதோடு பாரம்பரியத் துறையில் அந்நாடு குறைந்தத் தரவரிசையில் இடம் பெற்றுள்ளது.
மத்திய ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து இக்கணக்கெடுப்பில் ஏழாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் முதல் 25 இடங்களில் பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ளன.
சுவிட்சர்லாந்தைத் தொடர்ந்து ஜப்பான், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்திய நாடானது 2023 ஆம் ஆண்டு பட்டியலில் இருந்த இடத்தினை விட மூன்று இடங்கள் சரிந்து, இந்த ஆண்டின் பட்டியலில் 33 வது இடத்தில் உள்ளது.
ஜப்பான், சிங்கப்பூர், சீனா மற்றும் தென் கொரியா மட்டுமே ஆசியாவில் முதல் 25 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.