"புர்கா தடை" என்று பரவலாக அறியப் படுகின்ற பொது இடங்களில் முகத்தை முழு அளவில் மூடுவதற்கான சுவிட்சர்லாந்து அரசின் இந்தத் தடையானது ஜனவரி 01 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தத் தடையை சட்டவிரோதமாக மீறும் எவருக்கும் 1,000 சுவிஸ் பிராங்குகள் (1,144 டாலர்) வரை அபராதம் விதிக்கப்படும்.
பொது இடங்கள் மற்றும் பொதுமக்கள் அணுகக் கூடிய தனியார் கட்டிடங்கள் ஆகிய இடங்களில் மூக்கு, வாய் மற்றும் கண்களை துணிகளைக் கொண்டு மூடுவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
இந்தத் தடையானது விமானங்கள் அல்லது அரசு முறை மற்றும் அரசத் தூதரக வளாகங்களுக்குப் பொருந்தாது என்பதோடு மேலும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற புனிதத் தலங்களிலும் முகங்களை மறைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில், முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா மற்றும் நிகாப் உட்பட, பொது இடங்களில் முகத்தை மூடுவதைத் தடை செய்வதற்கு ஆதரவாக அந்த நாட்டு மக்கள் வாக்களித்தனர்.
சுவிட்சர்லாந்தில் உள்ள மக்களுக்கு அந்நாட்டின் ஜனநாயக அமைப்பின் கீழ் தங்கள் சொந்த விவகாரங்களில் நேரடியாகக் கருத்துத் தெரிவிப்பதற்கு அதிகாரமளிக்கப் பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் 8.6 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 5% பேர் முஸ்லிம்கள் ஆவர் என்ற ஒரு நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் துருக்கி, போஸ்னியா மற்றும் கொசோவோவிலிருந்து வந்தவர்கள் ஆவர்.