TNPSC Thervupettagam
March 13 , 2018 2322 days 725 0
  • மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகமானது பிரதம  மந்திரி பாரதிய ஜனவ்ஷதி பரியோஜனா (Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana - PMBJP) திட்டத்தின் கீழ், பெண்களுக்கு 100 சதவீத ஆக்ஸோ-உயிர்மட்கு சானிட்டரி நாப்கின்களை வழங்குவதற்காக    ‘சுவிதா’   (Suvidha) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • மே 28, 2018 அன்று உலக மாதவிடாய் தூய்மை தினம்  (World Menstrual Hygiene Day) முதல் நாட்டில் உள்ள அனைத்து ஜனவ்ஷதி கேந்திரா மையங்களிலும் இந்த  சுவிதா சானிட்டரி நாப்கின்கள் விற்பனைக்கு கிடைக்கும்.
  • சுவிதா சானிட்டரி நாப்கின்களில் சிறப்பு வேதியியல் சேர்ப்பான்கள் (additive) சேர்க்கப்பட்டுள்ளன. அதனால் இவற்றைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தியவுடன் காற்றிலுள்ள ஆக்ஸிஜனுடன் இவை  வினைபட்டு உயிரிமட்கலுக்கு (Biodegradable) உள்ளாகிடும்.
  • அனைவருக்கும் மலிவான, தரமான சுகாதார சேவையை வழங்க வேண்டுமென்ற அரசின் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • சுவிதா சானிட்டரி நாப்கின்கள்கள் நலிவடைந்த சமூகப் பெண்களுக்கு (underprivileged women)  தூய்மை, ஆரோக்கியம், நலன்    ஆகியவற்றை (சுவச்சதா, சுவஸ்தியா மற்றும் சுவிதா - Swachhta, Swasthya and Suvidha)    உறுதி செய்யும்.
  • பிரதம மந்திரி பாரதிய ஜனவ்ஷதி பரியோஜனா திட்டமானது மத்திய இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மருந்துப் பொருட்கள் துறையால் (department of Pharmaceuticals) நாட்டின் வெகுஜன மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துப்  பொருட்களை சிறப்பு கேந்திரா மையங்கள் மூலம் வழங்குவதற்காக   தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்