TNPSC Thervupettagam

சுவிஸ் மற்றும் இந்தியா: தானியங்கித் தகவல் பரிமாற்றம்

September 2 , 2019 1914 days 616 0
  • 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் சுவிட்சர்லாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் தானியங்கித் தகவல் பரிமாற்றம் (AEOI - The automatic exchange of information) தொடங்கியது.
  • இதன் மூலம், சுவிட்சர்லாந்தில் கணக்கு வைத்துள்ள  இந்தியர்களின் வங்கி விவரங்கள் இந்திய வரித் துறை அதிகாரிகளுக்கு கிடைக்கும்.
  • 2018 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் உள்ள இந்தியக் குடியிருப்பாளர்களால் வைக்கப் பட்டிருக்கும் (அல்லது மூடப்பட்ட) நிதிக் கணக்குகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் இந்தியா பெறும்.
  • AEOI என்பது நாடுகளுக்கிடையில் கோரிக்கை ஏதும் வைக்காமல் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதாகும்.
  • இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 22 அன்று AEOI இல் கையெழுத்திட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்