சுவிஸ் வங்கிகளில் இந்திய நாட்டினைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றால் வைக்கப்பட்டுள்ள நிதியானது, 2020 ஆம் ஆண்டில் 2.55 பில்லியன் சுவிஸ் பிராங்குகளாக (ரூ. 20,700 கோடிக்கு மேல்) உயர்ந்துள்ளது.
இது இந்தியாவைச் சேர்ந்த கிளை நிறுவனங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் மூலம் வைக்கப்பட்ட நிதிகளை உள்ளடக்கியதாகும்.
2019 ஆம் ஆண்டின் இறுதியில் சுவிஸ் வங்கிகளில் 899 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் (ரூ. 6,625 கோடி) என்ற அளவில் வைக்கப்பட்டிருந்த இந்திய வாடிக்கையாளர்களின் மொத்த நிதியானது தற்போதைய அளவிற்கு அதிகரித்துள்ளது.
இது இரண்டு ஆண்டுகளாக நடப்பில் இருந்த சரிவு நிலைப் போக்கை மாற்றியமைத்து, 13 ஆண்டுகளில் இல்லாத அளவிலான உயர்விற்குக் கொண்டு சென்றுள்ளது.