TNPSC Thervupettagam

சுவிஸ் வங்கியில் இந்தியச் சொத்துக்கள்

June 25 , 2024 5 days 131 0
  • கடந்த ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்திய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வைத்திருந்த பண மதிப்பில் கணிசமான வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
  • சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியின் கூற்றுப்படி, இந்த நிதிகள் 2023 ஆம் ஆண்டில் 70% சரிந்து 1.04 பில்லியன் சுவிஸ் பிராங்குகளாக (சுமார் 9,771 கோடி ரூபாய்) குறைந்து உள்ள நிலையில் இது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைவான அளவு ஆகும்.
  • 2023ம் ஆண்டின் இறுதியில் சுவிஸ் வங்கிகளின் இந்திய வாடிக்கையாளர்களுக்கான மொத்தக் கடன்கள் 1,039.8 மில்லியன் பிராங்குகளாக இருந்தன.
  • சுவிஸ் வங்கிகளில் இந்திய வாடிக்கையாளர்களின் மொத்த நிதி 2021 ஆம் ஆண்டில் 3.83 பில்லியன் பிராங்குகள் என்ற அளவில் உச்சத்தைத் தொட்டது என்பதோடு இது கடந்த 14 ஆண்டுகளில் பதிவாகாத மிக அதிக அளவாகும்.
  • சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நிதிகளுக்கான உலகளாவியத் தரவரிசையில், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியா 67வது இடத்தில் இருந்ததோடு ஒரு வருடத்திற்கு முன்பு இந்தியா 46வது இடத்தில் இருந்தது.
  • அதே நேரத்தில், ஐக்கியப் பேரரசு, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகியவை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்