TNPSC Thervupettagam

சுவிஸ் வங்கியில் உள்ள பணம்

July 3 , 2018 2241 days 616 0
  • UK தொடர்ந்து முதலிடத்தில் உள்ள நிலையில், சுவிஸ் வங்கியில் இந்தியக் குடிமகன்கள் மற்றும் நிறுவனங்களால் வைக்கப்பட்டிருக்கும் மொத்த பணமதிப்பின் அடிப்படையில் இந்தியா 73-வது இடத்திற்கு சென்றுள்ளது.
  • 2016-ம் ஆண்டு அந்த மதிப்பில் 44 சதவிகித வீழ்ச்சியுடன் 88-வது இடத்தில் இந்தியா இருந்தது. 2004-ம் ஆண்டு மிக உயர்ந்த இடமாக 37வது இடத்தில் இருந்தது.
  • சுவிஸ் தேசிய வங்கியின் சமீபத்தியத் தகவல்களின் படி, 2017-ல் CHF 1.01 பில்லியன் (ரூ.7,000 கோடி) அளவிற்கு 50% இந்திய பணத்தின் அளவு உயர்ந்துள்ளது.
  • 2017-ல் சுவிஸ் வங்கியில் இருந்த நிதியில் 21% வீழ்ச்சிக்குப் பிறகு தற்பொழுது பாகிஸ்தான் இந்தியாவை விட ஒரு படி முன்னேறி 72வது இடத்தில் உள்ளது.
  • CHF 166 பில்லியன் (எல்லா வெளிநாட்டு நிதிகளின் பங்கில் 11%) என்ற மதிப்புடன் 6% வீழ்ச்சியடைந்த போதிலும் அமெரிக்கா தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • முதல் 10 இடத்தில் உள்ள மற்ற நாடுகள், மேற்கத்திய தீவுகள், பிரான்சு, ஹாங்காங், பஹாமாஸ், ஜெர்மனி, கெர்ன்சே, லக்ஸம்பர்க் மற்றும் கெய்மேன் தீவுகள்.
  • பிரிக்ஸ் (BRICS) நாடுகளில் சீனா (20-வது), ரஷ்யா (23-வது) பிரேசில் (61-வது) மற்றும் தென் ஆப்பிரிக்கா (67வது) ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா தாழ்ந்த இடத்திலேயே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்