TNPSC Thervupettagam
July 12 , 2022 742 days 497 0
  • பெரிய ஆட்ரான் மோதுவி ய்வகத்தில், பேரண்டத்தின் கட்டமைப்புத் தொகுதிகளைப் பற்றி அறிவதற்கானப் பணியின் போது, ​​இதுவரை கண்டிராத மூன்று அணுவகத் துகள்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • அறிவியலாளர்கள் ஒரு புதிய வகையான "பென்டாக்வார்க்" மற்றும் முதல் இணை "டெட்ராக்வார்க்" ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளனர்.
  • இதனை ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மன்றமான CERN தெரிவித்துள்ளது.
  • லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் அல்லது பெரிய ஆட்ரான் மோதுவி என்பது புலப்படாத ‘தெய்வீக துகள்’ அல்லது ஹிக்ஸ் போசான் என்றத் துகளைக் கண்டறிந்த இயந்திரம் ஆகும்.
  • 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெடிப்புக்குப் பிறகு பேரண்டம் உருவாவதற்கு இது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
  • இது CERN மன்றத்தில் அமைந்துள்ள 27 கிமீ நீளமுள்ள லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் இயந்திரம் ஆகும்.
  • இது ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது.
  • CERN என்பது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அதிகாரப்பூர்வப் பார்வையாளர் தகுதி பெற்ற அமைப்பாகும்.
  • CERN ஆனது உலகளாவிய வலையமைப்பின் பிறப்பிடமாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்