சமீபத்தில் சூடான் வைரஸ் நோய் பரவி வருவதாக உகாண்டா நாட்டு அரசும், உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளன.
இது 41% முதல் 100% வரையிலான நோய் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளைப் பதிவு செய்ததுடன் ஒரு கடுமையான மற்றும் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய நோயாக இது உள்ளது.
உகாண்டாவில் இதற்கு முன்னதாக ஏழு பெருந்தொற்றுகள் ஏற்பட்டுள்ளது என்ற ஒரு நிலையில் மிகச் சமீபத்தில் பதிவான பெருந்தொற்று 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்டது ஆகும்.
உகாண்டாவிலும் ஏற்பட்ட 2022 ஆம் ஆண்டு சூடான் வைரஸ் பெருந்தொற்று ஆனது 164 நோய்ப் பாதிப்புகள் மற்றும் சுமார் 77 உயிரிழப்புகளை (உயிரிழப்பு விகிதம் 47%) ஏற்படுத்தியது.
சூடான் வைரஸுக்கு எதிராக சிகிச்சைகள் அல்லது தடுப்பூசிகள் எதுவும் இது வரை கண்டுபிடிக்கப் படவில்லை.
சூடான் மற்றும் எபோலா வைரஸ்கள் ஆகிய இந்த இரண்டும், ஆர்த்தோபொலா என்ற வைரஸ் குடும்பத்தினைச் சேர்ந்தவை என்றாலும், வெவ்வேறு புரதங்கள் மற்றும் சில மரபணு கூறுகளை அவை கொண்டுள்ளன.