ஒரு மருந்து எதிர்ப்பு சூப்பர்பக் பூஞ்சையான “கேண்டிடா அவுரிஸ்” ஆனது மருத்துவ உலகில் வேகமாகப் பரவி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது 2009 ஆம் ஆண்டில் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது. இது மிகவும் அதி தீவீர பின் விளைவுகளுடன் குறைந்தது 15 நாடுகளில் பரவியுள்ளது.
சி.அவுரிஸ் ஆனது மிக முக்கிய பூசண எதிர்ப்பு மருந்துகளினால் ஒழிக்கப் படவில்லை.
இந்தக் கிருமியானது நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ள மக்களிடம் எளிதில் பரவும்.
பூசணக் கொல்லி மற்றும் பயிர்கள் மீதான பூச்சிக் கொல்லி ஆகியவற்றின் பரவலான பயன்பாடானது சி.அவுரிஸின் எழுச்சிக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.