TNPSC Thervupettagam

சூயஸ் கால்வாயின் புதிய தட விரிவாக்கத்தின் சோதனை ஓட்டம்

January 2 , 2025 20 days 92 0
  • சூயஸ் கால்வாயின் தெற்கு முனைக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 10 கிலோ மீட்டர் தொலைவிலான கால்வாயின் சோதனையினை எகிப்து வெற்றிகரமாக மேற் கொண்டுள்ளது.
  • சமீபத்திய விரிவாக்கம் ஆனது கால்வாயின் இருவழிப் பகுதியின் மொத்த நீளத்தினை 72 கிலோ மீட்டரில் இருந்து முதல் 82 கிலோ மீட்டராக நீட்டித்துள்ளது, இதன் மூலம் இந்தக் கால்வாயின் மொத்த நீளம் 193 கிலோ மீட்டராக உள்ளது.
  • சோதனை ஓட்டத்தின் போது இரண்டு கப்பல்கள் கால்வாயின் இருவழிப் பகுதியின் புதிய பகுதி வழியாக எந்த அசம்பாவிதமும் இல்லாமல் கடந்து சென்றன.
  • இந்த விரிவாக்கம் ஆனது தினசரி கூடுதலாக 6 முதல் 8 கப்பல்கள் இயக்க இயலும் என்ற வகையில் கால்வாயின் போக்குவரத்துத் திறனை மேம்படுத்தி, சாத்தியமான அவசரநிலைகளில் போக்குவரத்தினை கையாளுவதற்கான அதன் திறனையும் நன்கு மேம்படுத்துகிறது.
  • "பிராந்தியச் சவால்கள்" காரணமாக, 2024 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் வருவாயில் சுமார் 7 பில்லியன் டாலர்களை எகிப்து அரசு இழந்தது, இது 2023 ஆம் ஆண்டில் பதிவான வருவாயில் இருந்து 60% சரிவு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்