TNPSC Thervupettagam

சூரஜ்கண்ட் சர்வதேசக் கைவினைக் கண்காட்சி 2020

February 1 , 2020 1639 days 904 0
  • 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதியன்று இந்தியக் குடியரசுத் தலைவரான ராம் நாத் கோவிந்த் 34வது சூரஜ்கண்ட் சர்வதேசக் கைவினைக் கண்காட்சியை ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில் திறந்து வைக்க இருக்கின்றார்.
  • இந்த மேளாவானது மத்திய சுற்றுலா, ஜவுளி, கலாச்சாரம் மற்றும் வெளி விவகாரங்கள் துறை அமைச்சகங்களுடன் இணைந்து சூரஜ்கண்ட் மேளா ஆணையம் & ஹரியானா சுற்றுலா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தக் கண்காட்சியானது சுற்றுலாவை மேம்படுத்த உதவ இருக்கின்றது.
  • சூரஜ்கண்ட் என்பது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான நீர்த்தேக்கம் ஆகும். இது ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில் ஆரவல்லி மலைத்தொடரின் தெற்கு தில்லி முனையில் அமைந்துள்ளது.
  • 34வது சூரஜ்கண்ட் சர்வதேச கைவினை மேளா - 2020க்கான பங்களிப்பாளர் நாடு உஸ்பெகிஸ்தான் ஆகும்.
  • இந்த மேளாவிற்கு இமாச்சலப் பிரதேச மாநிலமானது முதன்மை மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்