TNPSC Thervupettagam

சூரிய ஆற்றல் உற்பத்தி மற்றும் நுகர்வு

September 19 , 2024 8 days 89 0
  • தமிழ்நாட்டின் சூரிய ஆற்றல் உற்பத்தி மற்றும் நுகர்வு ஆனது சமீபத்தில் ஒரு புதிய உச்சத்தை எட்டியது.
  • சூரிய ஆற்றல் உற்பத்தியானது, 6,090 மெகாவாட்டைத் தொட்டது என்ற நிலையில். செப்டம்பர் 07 ஆம் தேதியன்று பதிவான 5,985 மெகாவாட் அளவினை இது விஞ்சியது.
  • சூரிய ஆற்றல் நுகர்வு ஆனது 45.47 மில்லியன் அலகுகளை எட்டியது என்ற நிலையில்  இது செப்டம்பர் 02 ஆம் தேதியன்று பதிவான சுமார் 43.70 மில்லியன் அலகுகள் என்ற முந்தைய அதிகபட்ச பதிவினை விஞ்சியுள்ளது.
  • தமிழ்நாடு மாநிலமானது 7,800 மெகாவாட்டிற்கு மேலான நிறுவப்பட்ட சூரிய ஆற்றல் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இதுவரையில், மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த சூரிய மின்னாற்றல் உற்பத்தி 521.73 மில்லியன் அலகாக இருந்தது.
  • மாநிலத்தின் தற்போதைய உச்ச கட்ட மின் தேவை சுமார் 18,115 மெகாவாட் மற்றும் தினசரி நுகர்வு சுமார் 400 மில்லியன் அலகுகள் ஆகும்.
  • 2024-25 ஆம் ஆண்டில் இதுவரையில் பதிவான அதிகபட்ச மின் தேவை 20,830 மெகா வாட் ஆகும்.
  • அதிகபட்ச தினசரி நுகர்வு 454.320 மில்லியன் அலகுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்