இந்தியாவில் மூன்றாவதாகவும் வடகிழக்கில் முதலாவதாகவும் சூரிய ஒளியால் இயக்கப்படும் கழிப்பறைகளைக் கொண்டுள்ள மாநிலமாக மணிப்பூர் உருவெடுத்துள்ளது.
இந்த கழிப்பறைகள் மணிப்பூரின் ஹையின்காங்கில் உள்ள இபுதோவு மாரிஜங் மலைப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம் சூரிய ஒளிக் கழிப்பறைகளைக் கொண்டுள்ளன.
முன்னதாக, விசாகப்பட்டின ரயில் நிலையம் 1000 கிலோவாட் சூரிய ஒளி மின்னழுத்த அமைப்புகள் (Solar Photo Voltaic) நிறுவப்பட்டு முழுமையான ஆற்றல் சேமிப்பு ரயில் நிலையமாக உருவாகியுள்ளது.
அதே போல, போபாலில் உள்ள தாத்யா தோப் மைதானம் முதலாவது முழுமையாக சூரிய ஒளியால் இயக்கப்படும் கிரிக்கெட் அல்லாத மைதானமாகும்.