TNPSC Thervupettagam

சூரிய ஒளி சக்திக்கான சந்தையில் இந்தியா முன்னிலை 2020 - அறிக்கை

May 17 , 2020 1656 days 666 0
  • மெர்காம் இந்திய ஆராய்ச்சியகம் சமீபத்தில் இந்த தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்தியா 2019 ஆம் ஆண்டில் 7.3 ஜிகாவாட் கொள்திறன் அளவிற்கு சூரிய ஒளி மின்சக்தியை நிறுவி, அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு உலகின் மூன்றாவது பெரிய சூரிய ஒளிசக்திக்கான சந்தையாக தனது இடத்தைப் பிடித்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு டிசம்பரின் இறுதியில் சுமார் 35.7 ஜிகாவாட் அளவிற்கு ஒட்டு மொத்த சூரிய ஒளி சக்தி நிறுவல்களை நாடு கொண்டிருந்தது.
  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் நிலவரப்படி அதானி நிறுவனமானது ஒட்டு மொத்த சூரிய ஒளி சக்தி நிறுவல்களின் அடிப்படையில் மிகப்பெரிய திட்ட உருவாக்குநராக இருந்தது.
  • ஒட்டு மொத்த சூரிய ஒளி சக்தியின் கூரை நிறுவல்களிலும் சரி 2019 ஆம் ஆண்டிற்கான கூரை நிறுவல்களிலும் சரி டாடா பவர் சோலார் நிறுவனமானது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் நாட்டின் முன்னணி சூரிய அலை மின்மாற்றி வழங்குநராக ஹுவாவே (Huawei) நிறுவனம் அமைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்