திருச்சி மாநகராட்சியானது பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தைத் தயாரிப்பதற்காக 2.5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளிப்பூங்கா நிறுவுவதற்காக தொழில்நுட்ப மற்றும் நிர்வாகத் தரப்பு ஒப்புதல்களை பெற்றிருக்கின்றது.
பஞ்சப்பூர் என்ற இடம் தகுதியான இடமாக கண்டறியப்பட்டு இருக்கின்றது.
சூரிய ஒளிப் பூங்காவில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பொது விநியோகக் கட்டமைப்பு மூலம் விநியோகித்திட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துடன் (Tamil Nadu Generation and Distribution Corporation - TANGEDCO) இணைந்து செயலாற்ற திருச்சி மாநகராட்சியானது திட்டமிட்டிருக்கின்றது.