ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களும் சூரிய சக்தி பூங்கா திட்டத்தின் மூலம் அதிக திறன்களை உருவாக்கியுள்ளன.
“சூரிய சக்தி பூங்காக்கள் மற்றும் மாபெரும் சூரிய சக்தி மின் உற்பத்தி ஆலைகளின் மேம்பாட்டிற்கான திட்டமானது 20,000 மெகாவாட் மொத்தத் திறன் உற்பத்தி என்ற நோக்குடன் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.
மேலும், குறைந்தபட்சமாக 50 சூரிய சக்தி பூங்காக்களை அமைப்பதற்காக சூரிய சக்தி பூங்கா திட்டத்தின் கீழான ஆலைகளின் உற்பத்தி திறன் இலக்கு, 2017 ஆம் ஆண்டு மார்ச் மாத்தத்தில் 40,000 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது.
இத்திட்டத்தின் காலக்கெடுவானது 2023-24 ஆம் ஆண்டு வரை நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.