கருடா ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனமானது, ஏரோ இந்தியா 2023 நிகழ்ச்சியில், சூரிய சக்தியில் இயங்கும் SURAJ எனப்படும் ஆளில்லா உளவு, கண்காணிப்பு மற்றும் கள ஆய்வு (ISR) வான்வழி வாகனத்தினை (ஜே-கிளைடர்) அறிமுகப்படுத்தியது.
இது குறிப்பாக கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகவும், உயர் நிலைப் படை அதிகாரிகளுக்கு நிகழ்நேரத் தகவல்களை வழங்குவதற்காகவும், நிலப்பரப்பில் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களைப் பாதுகாப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்ட உயரமான பகுதிகளில் இயங்கக் கூடிய ஒரு ஆளில்லா விமானம் ஆகும்.
இந்த ஆளில்லா விமானமானது சுமார் 10 கிலோ எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
12 மணி நேரம் பறக்கும் திறன் கொண்ட இது 3,000 அடி உயரத்தில் பறக்கக் கூடியது.