TNPSC Thervupettagam

சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானம்- SURAJ

February 27 , 2023 510 days 292 0
  • கருடா ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனமானது, ஏரோ இந்தியா 2023 நிகழ்ச்சியில், சூரிய சக்தியில் இயங்கும் SURAJ எனப்படும் ஆளில்லா உளவு, கண்காணிப்பு மற்றும் கள ஆய்வு (ISR) வான்வழி வாகனத்தினை (ஜே-கிளைடர்) அறிமுகப்படுத்தியது.
  • இது குறிப்பாக கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகவும், உயர் நிலைப் படை அதிகாரிகளுக்கு நிகழ்நேரத் தகவல்களை வழங்குவதற்காகவும், நிலப்பரப்பில் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களைப் பாதுகாப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்ட உயரமான பகுதிகளில் இயங்கக் கூடிய ஒரு ஆளில்லா விமானம் ஆகும்.
  • இந்த ஆளில்லா விமானமானது சுமார் 10 கிலோ எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
  • 12 மணி நேரம் பறக்கும் திறன் கொண்ட இது 3,000 அடி உயரத்தில் பறக்கக் கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்