TNPSC Thervupettagam

"சூரிய தேவி" காஸ்மிக் கதிர்

November 28 , 2023 235 days 235 0
  • பால்வெளி அண்டத்திற்கு அப்பால் இருந்து வந்ததாக நம்பப்படும் மிக அரிதான அதி உயர் ஆற்றல் கொண்ட துகள் ஒன்றை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • ஜப்பானியப் புராணங்களில் கூறப்படும் சூரிய தேவதையின் பெயரால் இந்தத் துகள் 'அமதேரசு' துகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • அமதேரசு துகள் 240 எக்ஸா எலக்ட்ரான் வோல்ட்ஸ்க்கும் (EeV) அதிகமான ஆற்றலைக் கொண்டுள்ளது.
  • இது லார்ஜ் ஹாட்ரான் முடுக்கிவிப்பானில் உற்பத்தியாகும் துகள்களை விட பல மில்லியன் மடங்கு அதிக ஆற்றல் கொண்டதாகும்.
  • இது 1991 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட, ஓ-மை-காட் எனப்படும் 320 EeV ஆற்றல் கொண்ட மற்றொரு அதி-உயர்-ஆற்றல் கொண்ட காஸ்மிக் கதிர் துகளுக்கு அடுத்த ஒன்றாக கூறப் படுகிறது.
  • காஸ்மிக் கதிர்கள் விண்கலம் மற்றும் விமானங்களில் ஊடுருவக் கூடியவை என்பதால் விண்வெளி மற்றும் உயரமான இடங்களில் பறக்கும் விமானங்களில் பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கு அபாயங்களை ஏற்படுத்துகின்றன.
  • நீண்ட நேரம் காஸ்மிக் கதிர்களின் வெளிப்பாட்டிற்கு உட்படுவது புற்றுநோய் மற்றும் பல்வேறு பிற உடல்நலப் பிரச்சினைகள் உருவாவதற்கான அதிக அபாயங்களுக்கு வழி வகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்