TNPSC Thervupettagam

சூரிய ரேடியோ அலை குறுக்கீட்டுமானி விண்வெளிச் சோதனை (SUNRISE Sun Radio Interferometer Space Experiment) திட்டம்

April 2 , 2020 1573 days 475 0
  • சூரியன் எவ்வாறு மிகப்பெரிய சூரிய ஒளி நுண்துகள் காற்றை (சூறாவளி) ஏற்படுத்துகின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக “SUNRISE” (சன்ரைஸ்) என்ற ஒரு திட்டத்தை நாசா அறிவித்துள்ளது.
  • சூரிய ஒளிச் சூறாவளியை ஆய்வு செய்யும் இந்தத் திட்டமானது சூரியக் குடும்பத்தின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • இது சூரியன் எவ்வாறு “சூரிய ஒளித் துகள் சூறாவளி” என்று அழைக்கப் படும் சூரிய ஒளிக் காற்றை உருவாக்கி அதை கோள்களைக் கொண்ட விண்வெளியில் எவ்வாறு வெளியிடுகின்றது என்பதை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆய்வானது வருங்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு அவர்களை சூரிய ஒளிச் சூறாவளியிலிருந்துப் பாதுகாக்க உதவ இருக்கின்றது..
  • இது சூரியனின் நிறமாலையை ஆய்வு செய்ய இருக்கின்றது.
  • அயனி மண்டலத்தின் காரணமாக புவியிலிருந்து சூரிய நிறமாலையை ஆய்வு செய்ய முடியாததால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகின்றது.
  • இது ஒரு மிகப்பெரிய ரேடியோ அலைத்  தொலைநோக்கியாகச் செயல்படும் ஆறு கூயுப்சாட் என்ற ஒரு செயற்கைக் கோள்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்