TNPSC Thervupettagam

சூரிய வெப்ப உமிழ்வு (CME)

August 7 , 2023 348 days 205 0
  • சமீபத்தில் சூரியனில் இருந்து சூரிய வெப்பப் பகுதியிலிருந்து (CME) சூரிய வெடிப்பு ஏற்பட்டது.
  • இம்முறை அது செவ்வாய்க் கோள் மற்றும் பூமி ஆகிய இரண்டு கோள்களின் மீதும் ஒரு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் அளவுக்குப் பரவியது.
  • பூமியிலும், சந்திரனிலும், செவ்வாய்க் கிரகத்திலும் ஒரே நேரத்தில் ஒரு சூரியன் சார்ந்த நிகழ்வின் தாக்கம் பதிவு செய்யப் பட்டது இதுவே முதல் முறையாகும்.
  • இரண்டு கோள்களும் சுமார் 250 மில்லியன் கிலோமீட்டர் இடைவெளியில் சூரியனுக்கு எதிரெதிர் பக்கத்தில் உள்ளன.
  • இருப்பினும் அவை ஆற்றல் பெற்றத் துகள்களின் வெடிப்பின் தாக்கத்தினைப் பெற்றன.
  • நிலவு மற்றும் செவ்வாய்க் கிரகம் ஆகிய இரண்டுமே தத்தமது காந்தப் புலங்களை உருவாக்குவதில்லை.
  • எனவே, சூரியத் துகள்கள் இவற்றின் மேற்பரப்புகளை எளிதில் அடையக் கூடியது.
  • இருப்பினும், செவ்வாய்க் கோளானது ஒரு மெல்லிய வளிமண்டலத்தைக் கொண்டு உள்ளது.
  • இது குறைந்த ஆற்றல் கொண்ட பெரும்பாலான சூரியத் துகள்களைப் பலமாக தடுத்து நிறுத்துவதோடு அதிக ஆற்றல் கொண்ட துகள்களின் வேகத்தினை மெதுவாக்குகிறது.
  • சூரிய வெப்ப உமிழ்வு ஆனது சூரியனின் கரோனா அடுக்கிலிருந்துப் பிளாஸ்மா மற்றும் காந்தப் புலத்தின் மாபெரும் உமிழ்வு ஆகும்.
  • அவை பில்லியன் டன் கணக்கிலான கரோனா துகள்களை வெளியேற்றக் கூடும் என்ற நிலையில் அவை அதனுள் காந்தப் புலத்தை (உமிழ்வுக் கற்றைகளில் உள்ளடக்கியுள்ள) சுமந்து செல்லக் கூடியவை ஆகும்.
  • இது சூரியக் காற்றின் கிரகங்களுக்கு இடையேயான காந்தப்புலத்தின் (IMF) ஒரு பெரும் வலிமையை விட அதிக வலிமையானதாகும்.
  • சூரிய வெப்ப உமிழ்வு ஆனது சூரியனிலிருந்து வெளி நோக்கி 250 கிமீ/வி முதல் 3000 கிமீ/வி வரையிலான வேகத்தில் பயணிக்கின்றன.
  • புவியின் ஈர்ப்பினால் ஈர்க்கப் படும் அதிவேக சூரிய வெப்ப உமிழ்வு ஆனது 15-18 மணி நேரத்தில் நமது கிரகத்தை அடைய முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்