ஒரு புதிய ஆய்வு ஆனது, சூரிய வெப்பத் துளைகளுக்குள் உள்ள வெப்ப மற்றும் காந்தப் புல கட்டமைப்புகளின் இயற்பியல் அளவுருக்களை துல்லியமாக மதிப்பிட்டுள்ளது.
அவை விண்வெளியின் வானிலை மற்றும் இந்தியக் கோடைக் காலத்திய பருவமழைப் பொழிவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
வெவ்வேறு அட்சரேகைகளில் உள்ள வெப்பத் துளைகளின் நிலவும் ஒரு வெப்பநிலைக் கட்டமைப்பில் எவ்விதக் குறிப்பிடத்தக்க மாறுபாடும் இல்லை.
மேலும், வெப்பத் துளைகளுக்குள் உள்ள காந்தப்புலக் கட்டமைப்பின் வலிமையானது சூரியனின் நடுக்கோட்டு ரேகையிலிருந்து துருவங்கள் வரையில் அதிகரிப்பதால் அது அட்சரேகைக்கு ஏற்ப மாறுபடும்.
வெப்பக் கட்டமைப்பைப் புரிந்து கொள்வது, வெப்பத் துளைகளின் தோற்றத்தினைக் குறித்து மதிப்பிட அறிவியலாளர்களுக்கு உதவுகிறது.