AR2770 என்ற மிகப்பெரிய சூரியக் கரும்புள்ளிக் கூட்டமானது சமீபத்தில் நாசாவின் சோலார் டைனமிக்ஸ் வானியல் ஆய்வகத்திலிருந்து (NASA’s Solar Dynamics Observatory) சூரியனின் மேற்பரப்பின் மீது எடுக்கப்பட்ட படங்களின் மூலம் காணப் பட்டது.
சூரியக் கரும்புள்ளி என்பது சூரியனின் ஒரு பகுதியாகும். இது அதன் மேற்பரப்பில் கருமை நிறத்தோடும் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள ஏனைய பகுதிகளை விட சற்றே குளிர்ந்த படியும் இருக்கிறது.
மேலும், இந்தப் பகுதியில், சூரியனின் காந்தப் புலமானது பூமியின் காந்தப்புலத்தை விட சுமார் 2,500 மடங்கு அதிகம்.
50,000 கி.மீ விட்டம் கொண்ட இந்தப் புள்ளிகளில் சில, சூரியனின் காந்தப்புலத்தைப் புலப்படுத்தும் குறிப்பான்கள் ஆகும்.