TNPSC Thervupettagam

சூரியக் குடும்பத்தில் நாசாவின் புதிய திட்டங்கள்

February 17 , 2020 1617 days 558 0
  • சூரிய குடும்பத்தின் ரகசியங்களை ஆய்வு செய்வதற்காக நாசா நான்கு சாத்தியமான பயணத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. அவையாவன:

1. DAVINCI+ (அருவளிமம் (அருமன் வாயுக்கள்), வேதியியல் மற்றும் இமேஜிங் பிளஸ் பற்றிய ஆழ்ந்த வளிமண்டல வெள்ளி ஆய்வு - Deep Atmosphere Venus Investigation of Noble gases, Chemistry, and Imaging Plus).

    • DAVINCI+ ஆனது வெள்ளிக் கோளின் வளிமண்டலத்தை ஆய்வு செய்ய இருக்கின்றது.

2. Io எரிமலை கண்காணிப்பகம் (IVO - Io Volcano Observer).

    • IVO ஆனது வியாழனின் சந்திரனை ஆராய இருக்கின்றது.

3. ட்ரைடென்ட்

    • நெப்டியூனின் தனித்துவமான மற்றும் உயர் செயல்பாடு கொண்ட பனிக்கட்டி நிலவான ட்ரைடென்ட்டை ஆராய இருக்கின்றது.

4. VERITAS (வெள்ளியின் கதிர்உமிழ்த் திறன், ரேடியோ அறிவியல், இன்சார், இடவியல் மற்றும் அலைமாலையியல் - Venus Emissivity, Radio Science, InSAR, Topography, and Spectroscopy).

    • VERITAS ஆனது கிரகத்தின் புவியியல் வரலாற்றைக் கணிப்பதற்காக வெள்ளிக் கோளின் மேற்பரப்பை வரைபடமாக்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்