இந்தியா 2023 ஆம் ஆண்டில் 20.8 ஜிகாவாட் அளவில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தித் திறன் மற்றும் 3.2 ஜிகாவாட் அளவில் புதிய ஒளி மின்னழுத்தக் கலன் உற்பத்தி ஆலைகளை நிறுவியது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்று நாட்டின் ஒட்டு மொத்த சூரியசக்தி தொகுப்பு உற்பத்தித் திறன் ஆனது 64.5 ஜிகாவாட்டாக இருந்தது, அதே நேரத்தில் அதன் சூரிய மின்கலத் திறன் ஆனது 5.8 ஜிகா வாட்டை எட்டியது.
குஜராத் மாநிலம் ஆனது, நாட்டின் ஒட்டு மொத்த ஒளி மின்னழுத்த உற்பத்தித் திறனில் 46.1% பங்கினை கொண்டுள்ளது.
தெலுங்கானா அனைத்து சூரிய மின்கல உற்பத்தி திறனில் 39% பங்கினைக் கொண்டு உள்ளது.
இந்தியா 2023 ஆம் ஆண்டில் 16.2 GW தொகுதிகளை இறக்குமதி செய்த நிலையில், இது 2022 ஆம் ஆண்டில் 10.3 GW ஆக இருந்த அளவை விட 158% அதிகமாகும்.
உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் ஆனது 2023 ஆம் ஆண்டில் 4.8 ஜிகாவாட் சூரியசக்தி தொகுப்புகளை ஏற்றுமதி செய்த நிலையில், இது 2022 ஆம் ஆண்டில் 1.6 ஜிகாவாட்டாக இருந்த அளவை விட 204% அதிகரித்துள்ளது.
இந்தியாவின் சூரியசக்தி மின்கல இறக்குமதி ஆனது 2023 ஆம் ஆண்டில் 15.6 GW ஆக இருந்த நிலையில், இது ஆண்டிற்கு 169% அதிகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் 10 மெகாவாட்டாக இருந்த சூரியசக்தி மின்கல ஏற்றுமதியானது 2,765% அதிகரித்து 2023 ஆம் ஆண்டில் 286.3 மெகாவாட் திறனை எட்டியது.