ஐக்கிய இராஜ்ஜியத்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆனது, நெகிழிக் கழிவுகள் மற்றும் பசுமை இல்ல வாயுக்கள் ஆகியவற்றினை நிலையான எரிபொருள்கள் மற்றும் பிற மதிப்பு மிக்கப் பொருட்களாக மாற்றும் ஒரு முறையினை உருவாக்கி உள்ளது.
இது சூரிய சக்தி மூலம் பெறப்படும் ஆற்றலைப் பயன்படுத்துகிறது.
இந்த ஒருங்கிணைந்த அணு உலை இரண்டு தனித்தனி பெட்டகங்களைக் கொண்டு உள்ளது.
இதில் ஒரு பெட்டகமானது நெகிழிப் பொருட்களுக்கும் மற்றொன்று பசுமை இல்ல வாயுக்களுக்குமானதாகும்.
இந்த உலையானது, பெரோவிசுக்கைட்டு என்ற ஒரு கனிமத்தினால் ஆன ஒளி உட் கிரகிப்பானைப் பயன்படுத்துகிறது.
பெரோவிசுக்கைட்டு என்பது அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பம் சார்ந்த சூரிய மின்கலங்கள் உற்பத்தியில் சிலிக்கானுக்கு மாற்றாக அமையக்கூடிய ஒரு நம்பத்தகு மாற்றாக இருக்கும்.
இந்த உலையானது, பாலி எத்திலீன் டெரெப்தாலேட் (PET) நெகிழிக் குடுவைகள் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றினை கிளைகோலிக் அமிலமாக மாற்றுவதுடன் கார்பன் மோனாக்சைடு, செயற்கை வளிமம் அல்லது படிவங்கள் போன்ற பல்வேறு கார்பன் சார்ந்த எரிபொருளாக மாற்றுகிறது.