நாசாவின் அறிவியலாளர் குழு ஒன்று AR2838 எனப்படும் சூரியக் கரும்புள்ளிக் கூட்டத்திலிருந்து மிகப்பெரிய அளவிலான ஒரு சூரியச் சுடரொளியானது வெளிப் பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சூரியச் சுடரொளி ஆகும்.
சூரியச் சுடரொளியானது சூரிய கரும்புள்ளிக் கூட்டத்துடன் தொடர்புடைய காந்த ஆற்றலின் வெளிப்பாட்டினால் வெளிவரும் தீவிரமான கதிர்வீச்சு வெடிப்பு நிகழ்வு ஆகும்.
சூரியச் சுடரொளி நிகழ்வானது நமது சூரியக் குடும்பத்தினுடைய ஒரு மிகப்பெரிய வெடிப்பு நிகழ்வாகும்.