TNPSC Thervupettagam

சூரியனின் காந்தப்புலம்

May 29 , 2024 50 days 98 0
  • புவியின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தும் சூரியப் புயல்களுக்குக் காரணமான சூரியனின் சக்தி வாய்ந்த காந்தப்புலமானது, நட்சத்திரத்தின் உள்ளார்ந்தப் பகுதியில் தோன்றியதாக இதுவரை அறிவியலாளர்கள் கருதினர்.
  • ஆனால் சமீபத்திய ஆய்வுகளின்படி, சூரியனில் காந்தப்புலத்தினை உருவாக்கும் செயல்முறையான சூரியனின் செயல்முறை என்பது, அந்த நட்சத்திரத்தின் வெளிப்புற அடுக்குகளில் மேற்பரப்புக்கு மிக அருகில் அமைந்திருக்கலாம்.
  • சூரியனின் மேற்பரப்பிலிருந்து 20,000 மைல்களுக்கு கீழே காந்தப்புலம் உருவாகிறது என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
  • இது சூரியனின் மேற்பரப்பிலிருந்து சுமார் 130,000 மைல்களுக்குக் கீழே இருந்து தோன்றியதாகக் கூறப்பட்ட முந்தைய ஆய்வுகளுக்கு முரணாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்